பிரான்ஸின் இளம் அதிபரானார் எம்மானுவேல் மக்ரோன்

பிரான்ஸ் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன்(39) வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் அந்நாட்டின் இளம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவில் என் மார்சே என்ற அணியின் சார்பில் போட்டியிட்ட மக்ரோனுக்கு 66,10% சதவித ஓட்டுகள் இவருக்கு அடுத்தபடியாக மெரைன் லி பென்னுக்கு33,90% வாக்குகள் கிடைத்தன.

தேர்தல் வெற்றி குறித்து மக்ரோன் கூறும்போது, “பிரான்ஸின் நீண்ட வரலாற்றில் புதிய அத்தியாத்தின் தொடக்கமே இந்தத் தேர்தல் வெற்றி. இது புது நம்பிக்கையை விதைக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

அதிபர் தேர்தல் முடிவு குறித்து பல்வேறு ஊடகங்களும் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளையும் தாண்டி 2% அதிகமான வாக்குகள் மக்ரோனுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது ஏன்?

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அதிபரை தீர்மானிக்கும், 50% வாக்குகள் யாருக்கும் கிடைக்காததால், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பெற்ற எம்மானுவேல் மக்ரோனும், மெரைன் லி பென்னும் போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்று எம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை பிரான்ஸில் நடந்த தேர்தல்களைவிட இத்தேர்தல் மிக வித்தியாசமானது. அவசர நிலை சட்டம் நிலவும் காலத்தில் அங்கு தேர்தல் நடைபெற்றதில்லை என்பதே அதற்குக் காரணம்

எம்மானுவேலின் சுவாரஸ்ய காதல்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது 15-வது வயதில் (1993-ல்) ஒரு நாடக அரங்கேற்றத்தின் போது வகுப்பு ஆசிரியர் டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார். அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும், மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இத னால் டிராக்னஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார்என அனை வரும் புரிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோனுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து 2007-ல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது 64 வயதான டிராக்னஸுக்கு 7 பேரக் குழந்தைகள் இருக்கின்றனர்.

x

Check Also

infographics