புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ எத்தனையோ கொலைகள் நினைவு கூரப்பட வேண்டி உள்ளன!

பல அறிவு ஜீவிகள் , பத்திரிகையாளர்கள், அரசிய‌ல்தலைவர்கள் , பாடசாலை அதிபர்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்,

ஆனால் கொல்லப்பட்ட புலி ஆதரவாள‌ர்கள் மட்டும் நினைவு கூரப்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் , புலி ஆதரவாளர்களுக்கும் கொலைகளாகத் தெரிபவை தீவிர புலி ஆதரவாளர்களான , ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் நிமலராஜன், சிவராம், நடேசன் ஆகியோர் மட்டும்தான். இவர்களின் கொலைக்காக நீதி கேட்கிறார்கள். புலிகளால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சகோதரப் படுகொலைகளின் விளைவுதான் இவர்களின் கொலைகள்.

சிவராம் ஒரு புலி ஆதரவு ஊடகவியலாளர். இவர் தமிழ் மக்களுக்குப் பரிட்சயமானவரும் அல்ல. குறிப்பாக வடமாகாண மக்களுக்கு இவரைத் தெரியாது. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இவரைத் தெரிந்திருக்குமோ தெரியாது.

வடக்கு கிழக்குமக்களுக்காக பகிரங்கமாக உழைத்த பலர் புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்பிரெட் துரையப்பா தொடக்கம் புலிகளால் கொல்லப்பட்ட மக்கள் சேவையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு மனமுவந்து சேவையாற்றியதனால் கொல்லப்பட்டவர்கள் , அல்பிரெட் துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், யாழ்ப்பாண முன்னாள் மேயரும் யோகேஸ்வரனின் மனைவியுமான “சரோஜினி யோகேஸ்வரன்” முன்னாள் மேயர் சிவபாலன், நீலன் திருச்செல்வம், அதிபர்கள் ஆனந்தராஜா, இராசதுரை, சிவகடாட்ஜம், பேராசிரியை ராஜினி திராணகம, மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் , பல்கலைக்கழக மாணவர்கள். இன்னும் பல பத்திரிகையாளர்கள் கொலைகள் மறைக்கப்பட்டுவிட்டன. மறுக்கப்ப்பட்டுவிட்டன.

ஆனால் மனித நேயமற்ற ஒரு கூறு கெட்ட சமூகம் புலிகளால் கொல்லப்பட்டவர்களை மறந்து கொல்லப்பட்ட புலி ஆதரவாளர்களை மட்டும் நினைவு கூருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கள் வாக்குகளுக்காக வருடா வருடம் இவர்களுக்கு மட்டும் அஞ்சலி செய்கின்றது.

Rahu Rahu Kathiravelu
x

Check Also

infographics