மரணங்களின் மாதம் மே! மே1பிரேமதாஸ மரணம் மே18பிரபாகரன் மரணம் மே 21ராஜிவ் காந்தி மரணம்.

இன்று கிளிநொச்சியில் ஒரு மே தின ஊர்வம் சென்றது. மிக முக்கிய அரசியல் கட்சியின் மேதின ஊர்வலம் போன்று இருந்தது. ஆனால் 150-200 பேர்வரைதான் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்துக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே சென்றார். இவர் பிரபலமான ஒலிபெருக்கியாளர்.

ஊர்வலத்தில் பிரதான கோசம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதாவது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதுதான். இதனை பார்த்த போது எனது சிந்தனை 2006-2009 காலப்பகுதிக்கு சட்டென்று சென்றது.

இதே ஒலிபெருக்கியாளர் அன்றைய கிளிநொச்சி ஆட்சியாளர்களுடன் இணைந்து கிளிநொச்சியில் பிரபல ஆள்பிடியாளராக இருந்தார். இவரால் பிடித்து செல்லப்பட்ட அல்லது இவரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாமல் இதே கந்தசுவாமி கோவிலில் இன்றுவரை கண்ணீர்விடும் தாய்மார்கள் கண்முன்னே வந்து சென்றனர்.

Satanic verses.

பி.கு:
1. இது யார் மனதையும் வலிக்க செய்யும் நோக்கிலானது இல்லை.. நினைவில் எழுந்த பழைய ஞாபகம் மட்டுமே.

2. மேதினத்துக்கும் இந்த காணாமல் போனோருக்கும் எதாவது சம்மந்தம் உண்டா?

“வலிகள் அனைவருக்கும் பொதுவானது”

Rajh Selvapathi
x

Check Also

infographics