Monthly Archives: April 2017

இரட்டை இலை சின்னம் ஏன் முக்கியம் ?

தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த ஒரு தலைவருக்கு அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று எந்த வித எதிர்பார்ப்புமின்றி வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ ஒரு படத்தை வைத்து மாலையை போட்டு, ஊர் கேட்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்காக தான் இருக்க முடியும்.

Read More »

மக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.

Read More »

அதிமுகவின் அடுத்த ஆளுமை யார்?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் பரபரப்பாக, திடீர் திருப்பங்களைக் கொண்டதாக, கணிக்க முடியாததாக உள்ளது. அதிமுக உட்கட்சியில் ஏற்படும் அதிர்வலைகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதோ, இல்லையோ அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதோ, எதிர் கேள்வி கேட்பதோ எப்போதும் நிகழாத சம்பவம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியும், கட்சியும் வேறு வேறு இடத்தில் இருந்தது.

Read More »

பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் ‘திடீர்’ அறிவிப்பு

பிரிட்டனின் நடப்பு நாடாளு மன்றத்தின் ஆயுட் காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும், பிரதமர் தெரீசா மே ‘தீடீர்’ பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார். எதிர்கட்சிகள் மீதும் அவர் குற்றச்சாட்டு. பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Read More »

தேம்ஸ் நதியில் கொட்டப்படும் 10 லட்சம் டன் மனிதக்கழிவு; தீர்வு என்ன?

மக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் கழிவுகளின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும். அதில் குறிப்பாக நகர்ப்புற மனிதக்கழிவுகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் அகற்றுவது என்பது மிகப்பெரிய சவால். லண்டனின் பழைய கழிவுநீரகற்றும் கட்டமைப்பால் அதிகரித்த கழிவுகளை கையாள முடியாததால், தேம்ஸ் நதியில் ஆண்டுக்கு பத்துலட்சம் டன் மனிதக்கழிவு அப்படியே கொட்டப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக பிரம்மாண்ட புதிய கழிவுநீரகற்றும் கட்டமைப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. உலகின் பழமையான பெருநகரங்களில் ஒன்றான லண்டனின் மனிதக்கழிவுகளை அகற்றும் கட்டமைப்பின் மேம்படுத்தும் இந்த பணி மற்ற பெருநகரங்களுக்கும் உதாரணமாக அமையுமா?

Read More »

சோதனையில் சிக்கிய ரூ.5 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை?

வருமான வரித் துறை சோதனையில் ரூ.5 கோடியே 50 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப் படுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நாளில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் ...

Read More »

At least 19 people, incl. 5 children, have died after a huge rubbish dump collapsed on to their homes in SriLanka.

மீதொட்டுமுல்லை சம்பவம்: பலியாகியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ! மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More »

திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி?

விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பைத்திய காரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங்களை ...

Read More »

அம்பேத்கர் பிறந்த நாள் அடையாளம் அல்ல, அவசியம்!

அம்பேத்கர் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தளங்களில் அவரது புகழ் பேசப்பட்டும் எழுதப்பட்டும் பரப்பட்டும் வருகிறது. மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மற்றும் இடதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் மூளை முடுக்குகளில் எல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் எடுத்து கொண்டாடி வருகின்றனர். அவர் பிறந்த தினத்தில் அவரை பற்றி பேசுவது எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட வேண்டிய ஒன்று அவர் இறுதி வரை குரல் கொடுத்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ...

Read More »

மோடியின் அம்பேத்கர் !

இந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே ...

Read More »