இரட்டை இலை சின்னம் ஏன் முக்கியம் ?

தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த ஒரு தலைவருக்கு அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று எந்த வித எதிர்பார்ப்புமின்றி வீட்டு வாசலிலோ, தெரு முனையிலோ ஒரு படத்தை வைத்து மாலையை போட்டு, ஊர் கேட்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள் என்றால் அது முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்காக தான் இருக்க முடியும். எம்ஜிஆர் எந்த அளவிற்கு ஆழமாக மக்கள் மனதில் பதிந்து இருக்கிறாரோ அந்த அளவிற்கு இரட்டை இலை சின்னமும் பதிந்து இருக்கிறது. அதுவே ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் அஇஅதிமுக இருந்த கால கட்டத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பெறுவதற்கும் ஒரு முக்கிய காரணமாகும். எம்ஜிஆர் இருந்த போது கூட செய்யாத ஒரு முயற்சியாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. இரண்டு விரலை காட்டி இரட்டை இலையையும் வெற்றியையும் ஒரு சேர குறிக்கும் சைகைகளை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் காட்டியதன் பிண்ணனியில் மிகப்பெரிய மக்கள் அலை ஈர்ப்பு அரசியல் இருந்தது. தற்போது இணைப்புக்காக இரு அணிகளும் துடிப்பதும், டிடிவி தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைக்கும் முடிவை எடுப்பதற்கும் அடிப்படை காரணங்களில் ஒன்று இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது. இரட்டை சிலை சின்னம் அல்லாது வேறு எந்த சின்னத்துடன் சென்றாலும் வெற்றி என்பது சாத்தியமற்று ஒன்று என்பதை 1989 தேர்தலிலேயே அதிமுக பார்த்திருக்கிறது. அதுவும் ஜெயலலிதா போன்ற ஒரு ஈர்ப்பு விசை இல்லாத காலகட்டத்தில் சின்னம் மட்டுமே அந்த கட்சியினர் முன் இருக்கும் இறுதி வாய்ப்பு. ஒரு வேளை இரு அணிகளும் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால், இரட்டை இலை இல்லாமல், தற்போதைய அரசியல் சூழலில் வெற்றி சாத்தியப்படாது என்பது திண்ணம். 1972க்கு பிறகு தமிழக மக்கள் மனதில் பதிந்து விட்ட இரட்டை இலை சின்னத்தை இழப்பது என்பது கட்சியை இழப்பதற்கு சமமான ஒன்று தான் என்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர். இலை துளிர்க்க இணைப்பு நிகழுமா? நிகழும் இணைப்பு நீடிக்குமா ?

தியாகச்செம்மல்

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...