At least 19 people, incl. 5 children, have died after a huge rubbish dump collapsed on to their homes in SriLanka.

மீதொட்டுமுல்லை சம்பவம்: பலியாகியோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !

மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் பலியாகியவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில், 07 பெண்கள் உட்பட 13, 14 மற்றும் 15 வயதுடைய 05 சிறுவர்களும் உள்ளடங்குவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, தொடர்ந்தும் இன்றும் (15) மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினமான நேற்று 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன.

எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது, வீடுகளிலிருந்து ஓடித் தப்பிவிட்டனர்.

இந்த குப்பை மலைக்கு எதிராக பிரதேசவாசிகள், பல தடவைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், அவை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

infographics