சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: சீரமைப்பு பணிகள் நாளை மாலை முடிவைடையும்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கின.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் 25ஜி என்ற இலக்கம் கொண்ட பேருந்து மற்றும் ஒரு கார் ஆகியவை சிக்கின.

இன்று பிற்பகல் சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது.

காரும், அதைத் தொடர்ந்து அரசு பேருந்தும் சென்றுகொண்டிருந்தபோதே திடீரென சாலை கீழே இறங்கி இரு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே விழுந்தன. எனினும், காரில் சென்ற மருத்துவரும், பஸ் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிட வந்திருந்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார்,.பள்ளம் விழுந்த இந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நாளை திங்கள்கிழமை மாலைக்குள் முடிவடைந்து முழுமையான போக்குவரத்து துவங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இப்பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பும் ஒரு பள்ளம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது அங்கு விபத்து ஏதும் நடக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...