உலக சாதனை படைத்த வைக்கோம் விஜயலக்ஸ்மி

காயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து, புதிய சாதனை படைத்துள்ளார் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.தனது இனிய குரலால், இரசிகர்களை கவர்ந்தவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. அவருக்கும், கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது.

பார்வை குறைபாடு உள்ளவர் வைக்கம் விஜயலட்சுமி. அவர் பாடுவது தவிர காயத்ரி வீணை வாசிப்பதில் வல்லவர். இந்நிலையில், கொச்சியில் கடந்த 5ஆம் திகதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் தொடர்ந்து 5 மணிநேரம் காயத்ரி வீணை வாசித்தார்.

கொச்சி நிகழ்ச்சியில் விஜயலட்சுமி தொடர்ச்சியாக 67 பாடல்களை வீணையில் வாசித்து அசத்தினார். இதன்மூலம் அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இது லிம்கா சாதனை புத்தக்கத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காயத்ரி வீணையில் 51 பாடல்கள் வாசிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை விஜயலட்சுமி முறியடித்துள்ளார். இசை தான் தன் வாழ்க்கை என்று கூறி வரும் விஜயலட்சுமி, இந்த சாதனை தனது பெற்றோர், குருமார்களால் சாத்தியமானது என்கிறார்.

விஜயலட்சுமி தனது இசை பணியை தொடர, திருமணத்தை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு பாட வேண்டாம் என்று, சந்தோஷ் கூறியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...