2017-18க்கான விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன!

2017-18ன் பணியமர்வுகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளுகிறோம் என அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம். விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 12 மே 2017.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேணியலுகையுடைய மேம்பாட்டை உருவாக்குவதற்காக தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்த முனையும் கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it.

மேற்கல்வி மாணவர்களும் அண்மைய பட்டதாரிகளும், புதிய மற்றும் இளம் தொழில் நெறிஞர்கள், பட்டறிவுமிக்க தொழிலதிபர்களும் தொழில்முனைவர்களும், ஓய்வுபெற்ற தொழில்நெறிஞர்களும் முதியோரும் ஆகியோருக்கான – களத்திலே சமூகம்சார் அமைப்புகளுடன் நெருக்கமாக உடனுழைத்து, வடக்கிலும் கிழக்கிலும் சமூக செயல்விளைவை ஏற்படுத்த உதவும் – 18 வெற்றிடங்கள் எம்மிடம் உள்ளன.

தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 2017ல் தமது செயற்றிட்டத்தை ஆரம்பிப்பர்.

வெற்றிடங்கள் பற்றிய முழுமையான விபரங்களையும் தேவையான தகுதிகளையும் அறியவும் இணையமூலம் விண்ணப்பிக்கவும் comdu.it என்ற இணையத்தளத்தை நாடுங்கள்.
இந்தத் தகவலை உங்கள் தனிப்பட்ட, தொழில்சார்ந்த, சமூக, மற்றும் ஊடக தொடர்புகளுக்கு மின்னஞ்சல் மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் அறியத்தருவதன் மூலம்; மிகவும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களை நாங்கள் கண்டடைய உதவுங்கள்.

வாழ்வில் கிடைத்தற்கரியதொரு வாய்ப்பில் ஆழ்ந்துபோங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...